பெண்ணின் வயிற்றில் ரக்பி பந்து அளவுள்ள நீர்க்கட்டி - மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பெண்ணின் வயிற்றில் இருந்து நீக்கப்பட்ட ரக்பி பந்து அளவுள்ள நீர்க்கட்டி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரக்பி பந்து
ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்து வரும் 42 வயது பெண் ஒருவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் வயிற்றுக்குள் ஏதோ உருளுவது போலவும், கடுமையான வலி, மலச்சிக்கல் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல அசௌகரியங்களை சந்தித்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் உடல் நிலை மோசமானதால் கடந்த ர் பிப்ரவரி 12 அன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு அல்ட்ராஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் உள்ளிட்ட விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் உள்ளிட்ட ஹெபடோபிலியரி அமைப்புடன் இணைக்கப்பட்ட வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவில் சதை போன்று ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமணையில் உள்ள மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
நீர்க்கட்டி
அப்போது ட ரக்பி பந்து அளவுள்ள நீர்க்கட்டி கண்டு அதிர்ச்சியைடந்தனர். சுமார் மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இது குறித்து இதுகுறித்து மருத்துவமணை கண்காணிப்பாளர் டாக்டர் விகாஸ் ராஜ்புரோஹித் கூறுகையில், கல்லீரல் மற்றும் பித்தநீர் அமைப்பைப் பாதிக்கும் ஒரு அரிய தீங்கற்ற கட்டியாகும்.
இந்த கட்டியின் வளர்ச்சி சுற்றியுள்ள உறுப்புகளையும் பாதித்திருந்ததால், செயல்முறையின் சிக்கலை இன்னும் அதிகரித்தது என்றார்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண் 17 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார்.மார்ச் 10 அன்று அவர் நல்ல உடல்நிலையுடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.