வந்தார்... அடித்தார்....சிக்ஸர்...ரிபீட்டு - கிரிக்கெட் உலகின் புதிய சிக்ஸர் மன்னன் இவர்தான்..!

lankapremierleague newsixerking லங்கா பிரீமியர் லீக்
By Petchi Avudaiappan Dec 11, 2021 07:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 லங்கா பிரீமியர் லீக் டி20 தனியார் கிரிக்கெட் தொடரில் இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ 5 சிக்சர்களை ஒரே ஓவரில் தொடர்ச்சியாக அடித்து அசத்தியுள்ளார்.

லங்கா பிரீமியர் லீக்கில் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்காக ஆடும் இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ கண்டி வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 சிக்சர்களை வரிசையாக அடித்து மைதானத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். 

மொத்தம் 23 பந்துகளில் 53 ரன்கள் விளாசிய அவிஷ்கா பெர்னாண்டோ அதில் 7 சிக்சர்களை விளாசினார். 2020 ஆம் ஆண்டு கால்லே அணிக்கு எதிராகவும் அவிஷ்கா பெர்னாண்டோ 7 சிக்சர்களை விளாசியிருந்தார்.

அவிஷ்கா பெர்னாண்டோ இதுவரை 74 டி20 போட்டிகளில் ஆடி 1,600க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். லங்கா பிரீமியர் லீகில் நன்றாக ஆடினால் நிச்சயம் அது ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் இவரை இந்த முறை ஐபிஎல் தொடரில் நல்ல விலைக்கு ஏலம் எடுப்பார்கள் என கூறப்படுகிறது.