எந்த மாணவர் மீதும் பிற மொழிகள் திணிக்கப்படாது- மத்திய அரசு தகவல்
government
language
student
federal
By Jon
எந்தவொரு மாணவர் மீதும் பிற மொழி திணிக்கப்படாது என மத்திய அரசின் கல்வி அமைச்சகம் உறுதியளித்துள்ளது. உலகத் தாய்மொழி நாளையொட்டிக் கல்வி அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தேசியக் கல்விக் கொள்கையின்படி அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழி, வட்டார மொழியே பயிற்று மொழியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு மாணவர் மீதும் பிற மொழி திணிக்கப்படாது என உறுதியளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை தாய்மொழிகளின் வளர்ச்சிக்கும் இடமளிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.