இன்று மொழிப்போர் தியாகிகள் தினம்; தியாகிகளின் புகைப்படங்களுக்கு முதலமைச்சர் மலர் துாவி மரியாதை
சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் தியாகிகளின் திருவுருவ படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் தினம்
தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்.
முதலமைச்சர் மரியாதை
சென்னை கிண்டியில் உள்ள உள்ள மணிமண்டபத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் படத்தை பார்வையிட்ட பிறகு, திருவுருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சுவாமிநாதன், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.