அரியணை ஏற மீண்டும் மொழிப்போர் தேவை - பாமக நிறுவனர் ராமதாஸ்

Dr. S. Ramadoss
By Irumporai Jan 25, 2023 06:20 AM GMT
Report

 தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டும் தோறும் ஜனவரி 25 - ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.

மொழிப்போர் தியாகிகள் தினம்

தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கிண்டியில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாலமுத்து, நடராசன் உயிர்த்தியாகத்திற்குப் பிறகு கீழப்பழுவூர் சின்னசாமி தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொண்டதன் 60-ஆவது நினைவு நாள் இன்று.

அன்னை தமிழைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றுக்கணக்கான மொழிப்போர் ஈகியர்களின் நாள் இந்நாள். இந்த நாளில் அவர்களின் ஈகத்தை போற்றுவோம். ஒருபுறம் இந்தியும், சமஸ்கிருதமும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு அரியணையும் இல்லை, மணிமுடியும் அணிவிக்கப்படவில்லை.  

அரியணை ஏற மீண்டும் மொழிப்போர் தேவை - பாமக நிறுவனர் ராமதாஸ் | Language War Is Needed Ramadoss

மீண்டும் மொழிப்போர்

எங்கேதமிழ்?' என்று 'தமிழைத் தேடி...' தான் ஓட வேண்டியிருக்கிறது. இது தமிழர்களுக்கு தலைகுனிவு ஆகும். அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர் தான் இன்றைய தேவை. தமிழைக் காக்க எந்தவொரு ஈகத்திற்கும் தயாராகவே இருக்கிறேன். தமிழைக் காக்கும் போராட்டம் என்ற நெடும்பயணத்தின் தொடக்கமாக தாய்மொழி நாளில் நான் தொடங்கவுள்ள 'தமிழைத்தேடி...' பயணம் அமையட்டும் என பதிவிட்டுள்ளார்.