மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை
மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து- நடராஜன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் திகதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது, இந்நாளில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் நோக்கி அமைதிப்பேரணியாக சென்று முக ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
சங்கத்தில் வளர்ந்து
சரித்திரங்கள் பல படைத்து
சீரிளமை கொண்டு விளங்கும்
நம் உயிருக்கு நேராம்
செந்தமிழர் தாயாம்
அன்னைத் தமிழை காக்க
தன்னுயிர் நீத்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்