பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை; வெள்ள நீரில் மூழ்கிய நகரங்கள் - 36 பேர் உயிரிழப்பு...!

Viral Video Brazil
By Nandhini Feb 20, 2023 09:50 AM GMT
Report

பிரேசிலில் பெய்த கனமழையில் 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை

பிரேசிலின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

கொட்டித் தீர்க்கும் கனமழையால் 6 நகரங்களுக்கு பேரிடர் நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர்.

இதுவரை கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 36 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் காணாமல் போனவர்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.    

landslides-in-brazil-floods-36-killed