மண் சரிவால் வீடுகள் மேல் உருண்ட பாறை - 7 பேரின் நிலை என்ன?

Tamil nadu TN Weather Tiruvannamalai
By Karthikraja Dec 01, 2024 06:20 PM GMT
Report

திருவண்ணாமலையில் மண் சரிவால் வீட்டின் மீது பெரிய பாறை விழுந்துள்ளது.

பாறை சரிவு

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

திருவண்ணாமலை பாறை

இந்நிலையில், திருவண்ணாமலையில் மலையை ஒட்டியுள்ள வஉசி நகர் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 14 அடி பாறை ஒன்று வீட்டின் மேல் விழுந்துள்ளது. 

7 பேர் நிலை

இந்த வீட்டில் ராஜ்குமார், அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் உட்பட 7 பேர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. மண் சரிவுக்கு முன்பு ராஜ்குமாரிடம் செல்போன் எண்ணில் ஒருவர் பேசியதாகவும், ஆனால் மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமார் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

திருவண்ணாமலை பாறை

இது குறித்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து மண் அரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அந்த வீடானது மண்ணால் மூடப்பட்டுள்ளது, மேலும் மேலுள்ள பாறை உருள வாய்ப்புள்ளது. எனவே மீட்பு படையினர் வந்த உடன் மீட்பு பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .