நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்? - வெளியான அதிர்ச்சி தகவல்!
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்தொடர் கனமழை பெய்து வருகிறது.
கூடலூர்
தொடர் மழை காரணமாக உதகை -கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்ட பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் வட்டம் நிலச்சரிவு ஏற்படும் என்று அபாயம் உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டாட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கூடலூர் வட்டம், கூடலூர் 2 கிராமம், கோக்கல் பகுதிகளில் கடந்த 27.06.2024 மற்றும் 28.06.2024 அன்று பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் உதகமண்டலம் மற்றும் புவியியல் துறை சார்ந்த வல்லுநர்களின் அறிவுறுத்தலின் படி
மழை காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது கோக்கால் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க விருப்பம் தெரிவிக்காதபட்சம் ஏதாவது நிலச்சரிவு ஏற்படும் என்று அபாயம் ஏற்படின் உடனடியாக கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு
1. கிராம நிர்வாக அலுவலர், கூடலூர் 2 9385243552
2. வருவாய் ஆய்வாளர், கூடலூர் 8610588152.
3. வருவாய் வட்டாட்சியர், கூடலூர் 9445000557
4. வருவாய் கோட்டாட்சியர், கூடலூர் 9445000437