ஜப்பானில் கடும் நிலச்சரிவு: 19 பேர் மாயமானதால் பதற்றம்
ஜப்பானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள வெப்ப நீரூற்றுகளுக்கு பெயர் பெற்ற அட்டாமி நகரத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று அப்பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தது. இதனால் குடியிருப்புகளில் வசித்து வந்த 19 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 35,500க்கும் ஏற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.