நில தகராறு: சகோதரனை 8 முறை டிராக்டர் ஏற்றி கொன்று வெறிச்செயல் - அதிர்ச்சி வீடியோ!

India Rajasthan Crime Death
By Jiyath Oct 26, 2023 03:23 AM GMT
Report

நிலத்தகராறில் சகோதரனை 8 முறை டிராக்டர் ஏற்றிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நில தகராறு

ராஜஸ்தான் மாநிலம் அடா கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கதூர் சிங் குர்ஜார் மற்றும் அத்தர் சிங் குர்ஜார். இவர்கள் குடும்பத்தினருக்கு இடையே நீண்ட காலமாக நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதன் காரணமாக, பயானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து நேற்று பகதூர் சிங் குடும்பத்தினர் டிராக்டரை எடுத்து சர்ச்சைக்குரிய நிலத்தை உழுவதற்குச் சென்றுள்ளனர்.

இதனையறிந்த சகோதரர் அத்தர் சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அது கடும் சண்டையாக மாற, இரு தரப்பினரும் நிலத்தில் கிடந்த பொருட்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

வெறிச்செயல்

இதில் அத்தர் சிங்கின் மகன் நிர்பத் சிங் கீழே விழுந்துள்ளார். அப்போது பகதூர் சிங்கின் மகன் தாமோதர் சிங், டிராக்டரை நிர்பத் சிங் மீது 8 முறை ஏற்றி, இறக்கி கொடூரமாக நசுக்கி கொலை செய்துள்ளார்.

நில தகராறு: சகோதரனை 8 முறை டிராக்டர் ஏற்றி கொன்று வெறிச்செயல் - அதிர்ச்சி வீடியோ! | Land Issue Youth Killed By Tractor By Relative

இவர்களின் மோதலை வீடியோ எடுத்த கிராமமக்கள் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட, வீடியோ வைரலாகியுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் நிர்பத் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் தலைமறைவாக இருக்கும் சிலரை தேடி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.