நிலத்தை அபகரித்த திமுக எம்.பி. மகன் - வேதனையில் மாவட்ட ஆட்சியர் கார் முன் மூதாட்டி தர்ணா!
தனது நிலத்தை அபகரித்தவரிகளிடம் இருந்த இடத்தை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியர் கார் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி.
மூதாட்டி தர்ணா
திருநெல்வேலி மானூர் எஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த மாடத்தி எஸ்தர் என்ற மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் கார்த்திகேயன் கார் ம முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அங்குள்ள போலீசார் அவரிடம் விசாரணை செய்துள்ளனர்.
அப்போது திருநெல்வேலி தொகுதி திமுக எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் சேவியர் செல்வராஜா உள்ளிட்ட மூன்று பேர் 1 கோடி மதிப்பிலான தனது நிலத்தை அபகரித்து விட்டதாக மூதாட்டி தெரிவித்துள்ளார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
கோரிக்கை
அந்த புகார் மனுவில் அவர் கூறியதாவது "தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த எனக்கு மானூர் கிராமத்தில் 3 ஏக்கர்56 சென்ட் இடம் உள்ளது. அதன் மதிப்பு 1 கோடி ரூபாயாகும்.
கால்லிடைக்குறிச்சியை சேர்ந்த கண்ணதாசன் மற்றும் அவர் மனைவி லட்சுமி மற்றும் ஆவரைகுளம் புதூரைச் சேர்ந்த திமுக எம்.பி ஞானதிரவியம் மகன் சேவியர் செல்வராஜா ஆகியோர் என்னை மிரட்டி எனது சொத்துக்களை அபகரித்து விட்டனர் .
எனக்கு எழுத படிக்க தெரியாது, என்னுடைய பத்திரம் ஐஓபி வங்கியில் உள்ளது. என்னை ஏமாற்றியர்வர்களின் மீது நடவடிக்கை எடுத்து எனது இடத்தை மீட்டுத் தர வேண்டும்" என்று அந்த மூதாட்டி புகார் மனு அளித்துள்ளார்.