அசந்தகுமாரின் வீட்டில் அதிசயம் - மனித உடலமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி!
மனித உடலமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டுக்குட்டி
இலங்கையின் தெனியாய மாவட்டம், செல்வகந்த பகுதியைச் சேர்ந்தவர் அசந்தகுமார். இவர் வளர்த்து வரும் ஆடு கடந்த வெள்ளிக்கிழமை குட்டி ஒன்றை ஈன்றது. இது ஆட்டுக்குட்டியை போல் இல்லாமல் மனித முகத்துடன் பிறந்துள்ளது.
இதனால் அந்த ஆட்டை வளர்த்த அசந்தகுமார் ஆச்சரிமடைந்தார். அந்த குட்டியின் முகம் மட்டுமின்றி, உடலும் இரு கை, இரு கால்களை போன்று மனித உடலமைப்பையே கொண்டிருந்தது.
உயிரிழப்பு
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால் அந்த ஆட்டுக்குட்டி பிறந்த அரை மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனால் ஆட்டை வளர்த்த அசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.