லாலு பிரசாத் யாதவ்விற்கு தன் சிறுநீரகத்தை தானமாக தரும் அவரது மகள்...! - நெகிழ்ச்சி சம்பவம்

India
By Nandhini Nov 10, 2022 11:40 AM GMT
Report

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்விற்கு தன் சிறுநீரகத்தை தானமாக தர அவரது மகள் முன்வந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாலு பிரசாத்தின் உடல்நிலை

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் இது தொடர்பாக ஆர்ஐஎம்எஸ் இயக்குநர் காமேஷ்வர் பிரசாத் கூறுகையில், லாலுவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நிமோனியா பாதிப்பு உள்ளது என்றார்.

சமீபத்தில், லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

லாலு யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவரது பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே லாலு பிரசாத்துக்கு சிறுநீரக நோய் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால், அவரின் பல உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் மருத்துவர்கள் வலி நிவாரணி மருந்துகளை கூட கொடுக்காமல் உள்ளனர். லாலு யாதவின் உடல்நிலையை பல மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

lalu-prasad-yadav-rohini-kidney

தன் சிறுநீரகத்தை கொடுக்க முன்வந்த மகள்

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ்விற்கு சிறுநீரகத்தை தானமாக அவரது மகள் ரோஹினி அளிக்க முன்வந்துள்ளார். ஆனால், இந்த அறுவை சிகிச்சை எப்போது நடைபெறும் என்று இன்றும் தகவல் வெளியாகவில்லை.