முதல்வர் நிதிக்கு குவியும் நன்கொடைகள்: லலிதா ஜுவல்லரஸ் ரூ.1 கோடி நிதியுதவி
Tamil Nadu
Stalin
CM Fund
Lalitha Jewellers
By mohanelango
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள முதல்வர் நிவாரண நிதிக்கு மக்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் நிறுவனங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் லலிதா ஜுவல்லர்ஸ் நிறுவனம் முதல்வர் நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.கிரண் குமார் முதல்வரை நேரில் சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.