லலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு

fraud lalitha jewellers
By Jon Mar 07, 2021 11:21 AM GMT
Report

லலிதா ஜுவல்லரியின் 27 கிளைகளில் கடந்த 4ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக நடந்து வந்த சோதனையில் கணக்கில் வராத 1000 கோடி ரூபாய் பிடிபட்டது. பழைய நகையை வாங்கி புதிய நகையாக மாற்றும்போது அவற்றை கணக்கில் காட்டாமல் மோசடி செய்து வந்துள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

மேலும், சேதாரம் என்ற பெயரிலும், போலி கணக்குகள் மூலம் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. போலி கணக்குகள் மூலம் தங்கத்தை வாங்கியது போலவே போலி கணக்குகள் மூலம் தங்கத்தை விற்று வந்ததும் தெரியவந்திருக்கிறது.

சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1.2 கோடி ரொக்கமாக சிக்கியிருக்கிறது.பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏராளமான பணத்தினை பரிவர்த்தனை செய்திருப்பதும் வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.