உயிருக்கு போராடி வரும் பிரபல நடிகை - தானம் செய்ய முன்வந்த ரசிகர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகை லலிதாவிற்கு கல்லீரல் தானம் செய்யவந்த ரசிகரின் செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தை இயக்கியவர் பரதன். இவரது மனைவி லலிதா தமிழில் அஜித்துடன் கிரீடம், தளபதியின் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே என நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது கல்லீரல் செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறியதால் அவரது மகள் ஸ்ரீகுட்டி கல்லீரல் தானம் கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இதனை கேட்ட லலிதாவின் ரசிகரும், கேரள நாடக கலைஞர் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி தனது 54 வயதில் கூட நடிகை லலிதாவிற்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.