காதலர் தினத்தில் நடிகையை பிரேக்அப் செய்த பிரபலம் - புது காதலியுடன் வெளியான வீடியோ

TATA IPL Sushmita Sen Actress
By Karthikraja Feb 14, 2025 01:40 PM GMT
Report

 லலித் மோடி நடிகை சுஷ்மிதா சென்னை பிரேக்அப் செய்து விட்டு புதிய காதலியுடன் உள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சுஷ்மிதா சென்

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் நடிகர் சுஷ்மிதா சென். பல்வேறு ஹிந்தி படங்களில் நடித்து பாலிவுட் உலகில் பிரபலமானவர். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். 

சுஷ்மிதா சென் - sushmita sen

தற்போது 49 வயதாகி விட்ட நிலையிலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல், இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

லலித் மோடி

சுஸ்மிதா சென் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் லலித் மோடியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். 56 வயதான லலித் மோடி, ஐபிஎல் முன்னாள் நிறுவன தலைவர் ஆவார். நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி பிசிசிஐ அவரை இடைநீக்கம் செய்த பின்னர், கடந்த சில ஆண்டுகளாகவே லண்டனில் வசித்து வருகிறார். 

lalit modi sushmita sen

மாலத்தீவுகள் மற்றும் இத்தாலிய தீவான சர்டினியாவில் விடுமுறையை கழிக்க சென்ற லலித் மோடி சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்த படங்களை தமது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தார். லலித் மோடிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று அவரது மனைவி புற்றுநோயால் இருந்து விட்டார். 

காதலர் தினமான இன்று தனது புது காதலியுடன் உள்ள வீடியோவை வெளியிட்டு, "அதிர்ஷ்டம் ஒருமுறை தான் வரும். எனக்கு இருமுறை வந்துள்ளது. 25 வருட நட்பு காதலாக மாறியுள்ளது" என தெரிவித்துள்ளார்.