8 நிமிஷ Interval Block இருக்கே?....தியேட்டரே தெறிக்கப்போகுது...லியோ தயாரிப்பாளர் லலித்

Vijay Anirudh Ravichander Lokesh Kanagaraj Leo
By Karthick Aug 22, 2023 10:08 AM GMT
Report

லியோ படத்தில் இடம்பெற்றுள்ள இடைவேளை காட்சி குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் பேசியுள்ளது தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

லியோ படம்   

தமிழ்நாட்டில் தற்போது அதிகமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது லியோ படம் தான். லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் என பலர் நடித்துள்ளனர்.

lalith-about-leo-interval-block

அனிருத் இசையில் தயாராகி வரும் படத்தின் இறுதிக்கட்ட post production பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. படத்தில் பணியாற்றிய பலரும் படம் குறித்து சில சில கருத்துக்களை தெரிவித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றனர்.

8 நிமிட Interval Block

இந்த லிஸ்டில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரும் இணைந்துள்ளார். பேட்டி ஒன்றில் அவரிடம் படத்தில் அவருக்கு மிகவும் கவர்ந்த காட்சி ஏதேனும் இருக்கிறதா? என கேள்வி கேட்கப்பட்ட போது, அதற்கு லலித் சட்டென படத்தின் இடைவெளி காட்சி குறித்து பேசினார். 

lalith-about-leo-interval-block  

இந்தப்படத்தின் இடைவேளை கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் வருகிறது என குறிப்பிட்ட அவர், அதை தாங்கள் பார்த்த போது, தங்களுக்கே புல்லரித்து விட்டது என்றும் நிச்சயமாக படம் தியேட்டரில் ரசிகர்களால் கொண்டாடப்படும்”என்று பேசினார்.