ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி...!
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லலித் மோடி மருத்துவமனையில் அனுமதி
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு 2 வாரங்களில் 2 முறை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவருக்கு நிமோனியா பாதிப்பும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். மெக்சிகோ நாட்டில் சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு விமானத்தில் திரும்பினார் லலித் மோடி.
இதனையடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லலித் மோடிக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பதால் 24 மணி நேரமும் பிராண வாயு சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, மீது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
