"நாங்களும் முஸ்லிம் சகோதரிகளுக்காக ஹிஜாப் அணிவோம்" - நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என தெரிவித்துள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மாண்டியாவில் உள்ள பியூசி கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக நேற்று இந்து அமைப்பு மாணவர்கள் காவிக்கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் கல்வி வளாகத்திற்குள் நுழைந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். அப்போது அந்த இடத்தில் பதட்டம் அதிகரித்தது. ஆனால் அந்த கும்பலை எந்த அச்சமும் இன்றி எதிர்கொண்ட அந்த மாணவி அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாலனது.
இதைத்தொடர்ந்து கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து ஏபிவிபி மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடந்தனர். இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனிடையே முஸ்லிம் பெண்களுக்கு தன்னுடைய ஆதரவை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், ஹிஜாப் பிரச்சினை இனியும் தொடர்ந்தால் நாங்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரிகளுக்கு குரல் கொடுக்க ஹிஜாப் அணிவோம்.. 22 வருடங்களாக முஸ்லிம் நாட்டில் வாழ்ந்திருக்கிறோம்.. ஹிஜாப் அணிபவர்களிடம் அதை அகற்ற சொல்வது வலி மிகுந்தது. ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு.. எனக்கே அதை அணிய பலமுறை தோன்றியுள்ளது.
“கர்நாடகாவில் நடக்கும்
— வன்னி அரசு (@VanniArasu_VCK) February 9, 2022
மத வன்முறைக்கு எதிராக நாங்களும் #Hijab போட்டு வர வேண்டியிருக்கும்”
திருமதி லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் இந்த குரல் தான் சனநாயகத்தின் குரல்.
மதச்சார்பின்மையின் குரல்.
இது தான் இந்திய ஒன்றியத்தின் வலிமை. pic.twitter.com/vhxzK0WAPb
ஹிஜாபை அணிய கூடாது என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? மாணவர்களை இதற்காக தூண்டி விடுவதை கடுமையாக கண்டிக்கிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மத்ததை எல்லாம் விடுங்க.. ஒரு இந்த நாட்டின் பிரஜையாக இதை கடுமையாக கண்டிக்கிறேன்.. ,இதுக்கு பின்னாடி யார் இருந்தாலும் சரி, பிள்ளைகளின் மனசை கெடுத்துடாதீங்க.. ப்ளீஸ்.. அதேபோல பெற்றோர்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்..
உங்க பசங்களுக்கு சொல்லி புரிய வையுங்க.. அந்த பெண்ணை ஹிஜாப் போட வேணாம்னு சொல்றதுக்கு இந்த பையன்களுக்கு என்ன உரிமை இருக்கு? உங்க வீட்டுல இருக்கிற அக்கா, அம்மாகிட்ட இதை பண்ணு, அதை பண்ணுன்னு சொன்னால் சும்மா இருப்பீங்களா? எனவும் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீடியாக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. இந்த பிரச்சனை, அதன் போக்கிலேயே டீல் பண்ணுவோம்.. இதுக்கு நடுவில் தேவையில்லாமல் பூணூல் போன்ற விஷயங்களை இழுக்காதீங்க.. இது ஒன்றும் பூணூல் பற்றின விஷயமோ, ஹிஜாப் பற்றின விஷயமோ இல்லை.. தனிமனித அடிப்படை உரிமை பற்றினது.. அவரவர் வாழ்க்கையை பிடித்தபடி, சுதந்திரத்துடன் வாழ உரிமை இருக்கிறது.
பாதுகாப்பற்ற உணர்வை முஸ்லிம் பெண்களுக்கு தயவுசெய்து தந்துடாதீங்க.. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்க.. தமிழக முதல்வருக்கும் பிரதமருக்கும் கோரிக்கை வைக்கிறேன்.. ஒரு பெண்ணா, முஸ்லிம் சகோதரிகளுக்காக நான் குரல் கொடுக்கிறேன்.. இனிமேலும் இது தொடர்ந்தால், நாங்கள் அத்தனை பேரும் ஹிஜாப் போட்டுக் கொண்டு வெளியே வர வேண்டி இருக்கும் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.