இந்த வயசுல எனக்கும் "அந்த" தொல்லை இருக்கு ..லட்சுமி ராமகிருஷ்ணன்
Are you okay baby என்ற படத்தை இயக்கியுள்ள நடிகையும், தொகுப்பாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கசப்பான அனுபவத்தை பற்றி தெரிவித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
திரைத்துறையில் நடிகையாக இருந்த போதிலும், லட்சுமி ராமகிருஷ்ணன் என்றால் அனைவருக்கும் சட்டென நினைவிற்கு வருவது, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். அந்தளவிற்கு அந்த நிகழ்ச்சி பெரும் பிரபலமடைந்தது.
நடிகை, தொகுப்பாளினியாக நல்ல வரவேற்பை பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது படங்களும் இயக்கி வருகின்றார். 2012-இல் ஆரோஹணம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தொடர்ந்து அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தொல்லை கொடுத்தாரு
அந்த படங்களை தொடர்நது அவர் தற்போது மீண்டும், Are you okay baby என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் நபர் ஒருவருக்கு தனக்கு அளித்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஒரு தொழில்முனைவோராக தான் இருந்த போது, அப்போது ஒரு மிகவும் சக்திவாய்ந்த நபர் ஒருவரிடம் இருந்து தனக்கு தொல்லை வந்துகொண்டே இருந்ததாக கூறினார். ஒரு கட்டத்துக்கு மேல் குடும்பமா, தொழிலா என வரும்போது, குடும்பம் தான் முக்கியம் என அனைத்தையும் விட்டுவிட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல, இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு தனக்கும் மீடியாவில் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களிடம் சில சுயமரியாதை பிரச்சனை வந்ததாக கூறி, எந்த சூழ்நிலையிலும்
சுயமரியாதையும் பாதுகாப்பும் முக்கியம் என குறிப்பிட்டிருக்கிறார்.