லட்சத்தீவு மக்களை கொதிப்படைய செய்த அறிவிப்பு - பதாகைகளுடன் போராட்டம்

lakshadweep schoolholiday
By Petchi Avudaiappan Dec 21, 2021 11:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள லட்சத்தீவில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டு வந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபிக் கடலில் அமைந்துள்ள லட்சத் தீவு பல்வேறு தீவுகளில் கூட்டமாகும். இங்குள்ள ஒருசில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இத்தீவில் உள்ள நிலையில்  அவர்கள் தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் லட்சத்தீவில் இனி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை கிடையாது என்றும் அதற்கு பதிலாக ஞாயிறுக்கிழமை விடுமுறை தினமாகவும் அறிவித்து லட்சத்தீவு கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. 60 ஆண்டுகளுக்கு முன்பு லட்சத்தீவில் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலம் முதலே வெள்ளிக்கிழமை தான் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் குறித்து யாரிடமும் ஆலோசனை நடத்தவில்லை. அரசின் தன்னிச்சையான முடிவாக இதை பார்க்கிறோம் என்று  லட்சத்தீவு எம்.பி பிபி முகம்மது பைசல் கூறியுள்ளார்.