குற்றவாளியினை கைது செய்யாமல் போலீஸ் கெஞ்சுவது ஏன்? - கொந்தளித்த உச்சநீதிமன்றதலைமை நீதிபதி
உத்தரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் கடந்த 3-ந் தேதி பாஜகவினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 1 பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதனை தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஆஷிஸ் மிஸ்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இநத நிலையில் இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று தொடங்கியது அப்போது அரசு தரப்பிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர் அவை:
மிக மோசமாக படுகொலை நடந்திருக்கிறது துப்பாக்கிச்சூடு எல்லாம் நடந்திருக்கிறது இவ்வளவு முக்கியமான விஷயத்தை இப்படி தான் நீங்கள் கையாளுவீர்களா?
மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை? உச்சநீதிமன்றம் கேள்வி இப்படியான கொலை வழக்கை வேறு யாராவது எதிர்கொண்டு இருந்தால் அவரை இந்நேரம் கைது செய்திருக்க மாட்டீர்களா எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், விவசாயிகள் படுகொலையில் முக்கியமான குற்றஞ்சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாமல் இன்று ஆஜராகுங்கள் நாளை ஆஜராகுங்கள் என கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள். ஒரு சாதாரணமானவனை நீங்கள் இப்படித்தான் கையாண்டிருப்பீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம்.
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திருப்தி இல்லை என்றும் நடவடிக்கை எல்லாம் அறிக்கையில் மட்டும்தான் உள்ளதே தவிர செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை என கூறியது .
மேலும், லக்கிம்பூர் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேச அரசு கால அவகாசம் கோர அதனை நீதிமன்றமும் வழங்கியுள்ளது
உச்சநீதிமன்றம் இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு தசரா பண்டிகை கால விடுமுறை என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது