ஏரியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் தொற்று பரவும் அபாயம்..! அச்சத்தில் கிராம மக்கள்..!

lake medical waste disease spread
By Anupriyamkumaresan May 27, 2021 07:35 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் உள்ள ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக உலகமே பெரும் அச்சத்தில் உறைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் தொரவளூர் கிரமத்தில் உள்ள ஏரியில், பக்கத்து கிராமத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருபவர் மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக வீசி சென்று புதைத்துள்ளனர். இதனால் அப்பகுதிமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவ கழிவுகளை வேறு இடத்தில் புதைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஏரியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் தொற்று பரவும் அபாயம்..! அச்சத்தில் கிராம மக்கள்..! | Lake Medical Waste Disease Spread Peope Afraid