வெளிநாடு சென்ற கணவன்...பெண்ணிடம் அத்துமீறிய சிறுவர்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெண் தற்கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அவரது மனைவி தமிழ் அழகி இவர் கடந்த 3 ஆம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழ் அழகி எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் ஆவணத்தை சேர்ந்த விக்னேஷ்,மணிகண்டன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தமிழ் அழகிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அந்த பெண்ணை தற்கொலைக்கு துாண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.