17வயது சிறுவனுடன் மாயமான மனைவி - கதறிய கணவன்!
Tamil nadu
Crime
By Sumathi
17வயது சிறுவனுடன் தலைமறைவான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவு
விருதுநகர், ராஜபாளையத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் அருகில் உள்ள செங்கல் சூலையில் பணியாற்றி வந்துள்ளார். திடீரென இவரை காணவில்லை என கூறி அவரது கணவர் போலீசில் புகாரளித்தார்.
மேலும் அதே நேரத்தில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த 17 வயது சிறுவனும் காணாமல் போகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசாருக்கு, இருவரும் கன்னியாகுமாரியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில், வழக்கை போக்சோ வழக்காக மாற்றி மகாலட்சுமியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.