உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

police leave lady sick sudden death
By Praveen Apr 30, 2021 10:11 AM GMT
Report

 விருதுநகரில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.

விருதுநகர் சூலக்கரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கனிமுத்து (44). கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் காரணமாக இரு நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவருக்கு உடல் நிலை மிகவும் மோசமானது. அதனால் அவர் மருத்துவமனைக்கு செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே இருந்த பெருத்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த மற்ற காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறை வாகனம் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சற்று நேரத்தில் பங்கு கனிமுத்து உயிரிழந்தார். இவருக்கு ராஜா என்ற கணவரும் ராஜஸ்ரீ (11) என்ற மகளும் உள்ளனர்.

பெண் காவலர் கனிமுத்து திடீர் இறப்பு போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.