தெருவில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளுக்கு பாடம் எடுத்த பெண் போலீஸ் அதிகாரி
திண்டுக்கலில் தெருவில் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளுக்கு பாடம் எடுத்த பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் சிலர் விபரீதம் புரியாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.
அவ்வாறு வருபவர்களை கண்காணித்து, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்யும் வேலையையும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
இதனிடையே பழனி அருகே உள்ள கிராமம் ஒன்றில் பெண் அதிகாரி குணசுந்தரி ஈடுபட்டு இருந்த போது, 2 சிறுவர்கள் மாஸ்க் அணியாமல்தெருவில் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் குணசுந்தரி 2 சிறுவர்களையும் அழைத்தார்.. போலீஸை பார்த்ததும் 2 சிறுவர்கள் மிரண்டாலும், அவர்களிடம் அன்பாக பேசினார். அறிவுரை கூறியதும் மரியாதை செய்யும் விதமாக 2 சிறுவர்களுக்கும் மாலை அணிவித்து வாழ்த்தும் சொன்னார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.