4 பேரை திருமணம் செய்த பலே பெண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

lady married 4 husbands
By Anupriyamkumaresan Jul 18, 2021 04:48 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பணத்திற்காக நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்த சௌமியா என்ற பெண் ஒருவர், தனது முதல் திருமணத்தில் பண தேவை பூர்த்தியாகவில்லை என்பதால் அரியலூரை சேர்ந்த சக்தி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

4 பேரை திருமணம் செய்த பலே பெண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!! | Lady Married 4 Husbands In Tamilnadu

மேலும் பல பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாயும், நகையும் பறித்துள்ளார். வீட்டின் வரபேற்பறையில் இன்னாள், முன்னாள் அமைச்சர்களின் படங்களை மாட்டி வைத்து, அவர்கள் உறவினர்கள் என்று சொன்னதால், பலரும் நம்பி சௌமியாவிடம் பணம் கொடுத்துள்ளனர்.

பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் பயத்தில் அங்கிருந்து தப்பியோடிய சௌமியா சேலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை 4வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

4 பேரை திருமணம் செய்த பலே பெண் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!! | Lady Married 4 Husbands In Tamilnadu

இதனை தொடர்ந்து பணத்தை பறிகொடுத்த மக்கள், ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். . இதனை தொடர்ந்து சௌமியாவை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பணத்தேவைக்காக அடுத்தடுத்து நான்கு திருமணம் செய்தது தெரியவந்தது.