Monday, May 19, 2025

சர்வைவர் டீம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு - நிகழ்ச்சியில் இருந்து லேடி கேஷ் திடீரென வெளியேற்றம்

survivor ladykash ActorArjun
By Petchi Avudaiappan 4 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வீடியோ
Report

 சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் லேடி கேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில், அதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் என்ற சாகச நிகழ்ச்சிக்கான ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் ஷுட்டிங் தென்னாப்பிரிக்காவில் உள்ள தீவு ஒன்றில் நடத்தப்பட்டு வருகிறது. எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் போட்டியாளர்கள் 90 நாட்கள் இந்த தீவில் வசிக்க வேண்டும். உடல் மற்றும் மனவலிமையை சோதிக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது.

இதனிடையே பாடகியும், பாடலாசிரியருமான லேடி காஷ் தானாகவே இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். மேலும் கோவிட் அறிகுறிகளை சர்வைவர் நிகழ்ச்சி நடத்துபவர்கள் கண்டு கொள்ளவில்லை என கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஷோ நடத்துபவர்கள் மீது நான் அதிகம் ஏமாற்றத்தில் இருக்கிறேன்.எனக்கு பேட்டி கொடுக்க பிடிக்காது, ரொம்ப கம்மியா தான் பேட்டி கொடுத்திருப்பேன், ஆனால் பேச வேண்டிய விஷயங்கள் வரும்போது நான் கண்டிப்பாக பேசுவேன், பயப்படாமல் முன்வந்து நின்று பேசுவேன்.

எப்போதும் என் கூட மக்கள் இருக்காங்க, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. என் பக்கம் எப்போதும் நியாயம் இருக்கு, அதனால் எனக்கு எதுவும் ஆகாது என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இண்டஸ்ட்ரியில் நிறைய விஷயங்கள் நடக்கிறது, பல தப்பான விஷயங்கள் நடக்கிறது. பப்ளிசிட்டி தரும் விஷயங்கள் என்றால் பலரும் முன்வந்து பேசுகிறார்கள். ஆனால் எதாவது தப்பாக போகுமா என்கிற பயத்தில் பலரும் பேசாமல் போகிறார்கள். நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்கிற தைரியம் என்னிடம் இருக்கிறது. இதை சொல்லவில்லை என்றால் என் மனசாட்சிக்கு சரிவராது.

இப்படி ஒரு தவறான விஷயம் நடக்கும்போது அதை பற்றி பேசவில்லை என்றால் அது தவறாக போகும், நான் அனுப்பிய மெசேஜ் என் நிறுவனம் மூலமாக வெளியிடப்படும் என கூறி இருந்தார்.போட்டியாளர்கள் மூன்று பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தொகுப்பாளர் சொன்னபிறகு தான் எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்போது மற்றவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. எனக்கு நெகடிவ் என வந்தது. பாசிட்டிவ் ஆனவர்கள் ஓய்வெடுத்து நெகடிவ் ரிசல்ட் வந்த பிறகு மீண்டும் ஷோவில் தொடரலாம் என சொன்னார்கள்.

ஆனால் எனக்கு கொரோனா நெகடிவ் என்றாலும் அறிகுறிகள் இருந்தது. அதனால் எனக்கு அந்த வாய்ப்பு வழங்க அவர்கள் முன்வரவில்லை. தற்போது வெளியேறவேண்டும் அல்லது உடனே ஷோவில் இனைய வேண்டுமென சொன்னார்கள். என்னை அவர்கள் தங்க வைத்திருந்த இடத்தில் இருந்து வேறு யாரையும் தொடர்பு கொள்ள விடவில்லை, அதன் பின் என் சொந்த முயற்சியில் வேறு இடத்திற்கு சென்று தங்கினேன், என் குடும்பத்தினரிடமும் பேசினேன்.

டாப் 8ல் நான் வந்தாலும், என்னை அவர்கள் இப்படி வெளியேற்றிவிட்டார்கள். இதற்கான விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா, சென்னை திரும்பிவிட்டேனா என்று கூட ஒருவரும் கேட்கவில்லை. என் பேமெண்ட் கூட தற்போது சிக்கலில் இருக்கிறது. தேவையில்லை என்பதால் இப்படி தூக்கி எரிந்துவிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். லேடி கேஷின் இந்த குற்றச்சாட்டால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.