கோவில் திறக்கலைனா ஒரு லட்சம் பேர் உயிரிழப்பார்கள் - கதறி அழுத பெண்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவில்களை திறக்க வேண்டுமமென பெண் ஒருவர் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா கட்டுப்படுத்த கடந்த 2-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி ஆடி மாதம் என்பதால் ஆடிப்பெருக்கு ஆடி ,கிருத்திகை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் முக்கியமான கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் என்பதால் கோவில்களில் அதிகம் கூடும் வாய்ப்பு உள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் விஷம் அருந்துவதற்க்கு முன் அவரை தடுத்தி நிறுத்தினர்.இதன் தொடர்ச்சியாக போலீசார் காலில் விழுந்த பெண் கோவையில் முக்கிய கோவிலாக திகழும் கோனியம்மன் மற்றும் தண்டு மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் மக்கள் அதிகமாக கூடாமல் இருக்க போலீசார் பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமெனவும் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளை மூடி கோவில்களை திறக்க வேண்டுமெனவும், திறக்கவில்லை என்றால் கொரோனா நோயினால் அதிகமான மக்கள் இறப்பார்கள் என தரையில் புரண்டு கண்ணீருடன் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயற்சி எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.