திருமணமாகி 2 குழந்தைகள் - பல ஆண்களை ஏமாற்றி வலையில் சிக்கவைத்த பெண்!
பெண் ஒருவர் பல இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமண மோசடி
கரூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு வீட்டில் திருமணத்திற்காக பெண் பார்க்க தொடங்கினர். அதனை தெரிந்து கொண்ட கோவில்பட்டியை சேர்ந்த கல்யாண புரோக்கர்களான
பாலமுருகன் மற்றும் அமிர்தவல்லி ஆகியோர், சிவகாசியைச் சேர்ந்த பொன்தேவி என்ற பெண்ணை பற்றி கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி அவரை திருமணம் செய்தால் செல்வம் செழிக்கும் என அளந்துவிட்டுள்ளனர்.
சிக்கிய பெண்
இதனை நம்பிய விக்னேஸ்வரனின் குடும்பத்தினர் அவசர அவசரமாக அவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த மூன்றாம் நாளே பொன்தேவி, சிவகாசியில் உள்ள சித்தி வீட்டிற்கு செல்லவேண்டுமென விக்னேஷையும் அழைத்து சென்றுள்ளார்.
அப்பொழுது அவரது சித்தியின் மகளுக்கு புத்தாடை எடுக்கவேண்டுமென்று விக்னேஷிடம் 8 ஆயிரத்து 500 ருபாய் வாங்கி சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவரை காணவில்லை என்றதும் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு பின் தான் இவரை போன்று பல ஆண்களை இவர் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் பொன்தேவி மற்றும் அந்த இரு புரோக்கர்களையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் அவர் ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.