பெண்கள் கிரிக்கெட் போட்டி - இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி!
india
cricket
ladies
wins
By Anupriyamkumaresan
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
ஹோவ் நகரில் நேற்று நடந்த இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா ஷபாலி வர்மாவின் அதிரடி உதவியுடன் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் கடைசி ஆட்டம் நாளை
மறுதினம் நடக்கிறது.