நிதி பற்றாக்குறையில் சிக்கிய இந்தியா - வெளியான பகீர் தகவல்
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை முதல் அரையாண்டில் 35 சதவீதத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
2021 செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5,26,851 கோடியைத் தொட்டுள்ளது.
இது, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 35 சதவீதமாகும். இருப்பினும், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நிதிப் பற்றாக்குறையானது நடப்பு நிதியாண்டில் மிகவும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது.
கடந்த நிதியாண்டில் கொரோனா பேரிடரை எதிா்கொள்ள அதிக செலவிட வேண்டியிருந்ததால் நிதிப் பற்றாக்குறையானது பட்ஜெட் இலக்கை தாண்டி 114.8 சதவீதமாக அதிகரித்தது என சிஜிஏ தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாக (ரூ.15,06,812 கோடி) இருக்கும் என்பது மத்திய அரசின் எதிா்பாா்ப்பாக உள்ளது.