வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம் , வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அமைச்சர் எச்சரிக்கை
இந்த நிலையில் தவறான உள்நோக்கத்தோடு விஷம பிரச்சார்ம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளர் நலத்துறையமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் பங்கு அதிகம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் பெருமளவில் முதலீடு செய்துள்ள பெருந்தொழில், சிறு தொழில் நிறுவனங்களில் பல மாநில தொழிலாளர்களும் அமைதியான சூழலில் பணியாற்றுகின்றனர்.
மாநில வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர் மேம்பால கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பெரும அளவில் தங்களின் பங்களிப்பை வட மாநில தொழிலாளர்கள் வழங்கி வருகின்றனர்.
அனைத்து நிறுவனங்களிலும் தமிழக அரசின் தொழிலாளர் நல சட்டங்கள் கடைபிடிக்கப்படுவது தொழிலாளர் நலத் துறை மூலம் உறுதி செய்யப்படுவதாக கூறியுள்ளார்.