உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா ?இது அரசியலுக்கு அப்பாற்பட்டது-எல். முருகன் !

Udhayanidhi Stalin DMK BJP
By Vidhya Senthil Aug 20, 2024 06:56 AM GMT
Report
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

 எல். முருகன் 

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியளர்களை மத்திய இணையமைச்சர் எல். முருகன் சந்தித்தார். அப்போது பேசியவர்,'' தூத்துக்குடிக்கு பல ரயில்வே திட்டங்களை பிரதமர் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக தூத்துக்குடி - மதுரை இரட்டை ரயில் பாதை திட்டம் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா ?இது அரசியலுக்கு அப்பாற்பட்டது-எல். முருகன் ! | L Murugan Says Udayanidhi As Deputy Cm

மேலும் குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளம், துறைமுகத்தை மேம்படுத்துதல் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக வேகமாக வளர்ச்சி பணிகளை செய்வதில் முன்னுரிமை கொடுத்து வருவதாக கூறினார்.

என்னிடம் அண்ணாமலை பற்றி தேவையில்லாமல் கேட்காதீங்க..கடுப்பான எல்.முருகன்!

என்னிடம் அண்ணாமலை பற்றி தேவையில்லாமல் கேட்காதீங்க..கடுப்பான எல்.முருகன்!

அரசியலுக்கு அப்பாற்பட்டது

தொடர்ந்து கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் பாஜக கலந்து கொண்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா ஒரு அரசு விழா‌. இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்று கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா ?இது அரசியலுக்கு அப்பாற்பட்டது-எல். முருகன் ! | L Murugan Says Udayanidhi As Deputy Cm

மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கேள்விக்கு,'' உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது குறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் தமிழ்நாட்டின் துணை முதல்வராக வருவதால் தமிழ்நாட்டில் ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது.

இவ்வாறு எல். முருகன் கூறினார்.