கேன்ஸ் திரைப்பட விழாவில் வேட்டி, சட்டையுடன் கெத்தா வந்த எல்.முருகன் - வைரலாகும் புகைப்படம்
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.
உலகெங்கிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக இதில் ஏ.ஆர்.ரகுமானின் ‘லே மஸ்க்’ படம், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் டிரைலர், மாதவன் இயக்கி உள்ள ‘ராக்கெட்ரி’ படம், பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இவ்விழாவில் வெளியிடப்பட்டன.
இவ்விழாவில், வைரத் தொங்கல்களை அணிந்து, ஸ்ட்ராப்லெஸ் இறகு கவுனில் கனவு கன்னியாக தோன்றினார் பூஜா ஹெக்டே.
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்டி சட்டையில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றார். நடிகர் பார்த்திபன் கூட இருக்கும் வேல்முருகன் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
