மாநிலங்களவை உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்
mp
bjp
lmurugan
rajyasabha
By Irumporai
மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன், மத்தியபிரதேசத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவர் எல்.முருகன்.
மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட போது அவருக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை , தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக அவரை பாஜக தலைமை அறிவித்துள்ளது.