மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரனாகிய கெய்ல் ஜேமிசன்..!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமிசன் டெஸ்ட் போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை
கான்பூரில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கும், நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.
இதனைத் தொடர்ந்து 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் \இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியைவிட 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய போது, டெஸ்ட் போட்டிகளில் தனது 50வது விக்கெட்டை பதிவு செய்த நியூசிலாந்து அணியின் கெய்ல் ஜேமிசன் இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக மிக குறைந்த இன்னிங்ஸில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
முன்னதாக சேன் பாண்ட் 10 இன்னிங்ஸில் 50 விக்கெட் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது, தற்போது இதனை கெய்ல் ஜெமிசன் முறியடித்துள்ளார். அதே போல் 20ம் நூற்றாண்டில் மிக குறைந்த பந்துகளில் 50 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் கெய்ல் ஜேமிசன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.