ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் கடந்தாண்டு பெங்களூரு அணியால் ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் பெயர் இடம் பெறவில்லை. இதனிடையே அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அதில் கடந்த ஒரு வருடங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் கிரிக்கெட் போட்டிகளுக்காக பலமுறை தனிமைப்படுத்தப்பட்டேன். இது கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த ஒரு வருடத்திற்கான கிரிக்கெட் அட்டவணையை பார்க்கும் போது ஐபிஎல் விளையாடும் 8 வாரங்கள் வீட்டில் இருப்பது நல்லது என்று முடிவெடுத்துள்ளேன்.
அதேசமயம் நியூசிலாந்து கிரிக்கெட்டில் நான் எங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அந்த இடத்துக்கு இன்னும் முன்னேற நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது என கைல் ஜேமிசன் கூறியுள்ளார்.
கடந்தாண்டு பெங்களூரு அணிக்காக 15 ஆட்டங்களில் ஒன்பதில் விளையாடிய அவர், ஓவருக்கு 9.60 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இதனாலும் அவர் தனது பார்மை மெருகேற்றிக் கொள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.