கீவ்வில் 900க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுப்பு - உக்ரைன் போலீசார் தகவல்..!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 52-வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதிகளை விட்டு ரஷ்யா நாடடைச் சேர்ந்த படைகள் வெளியேறிய நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்டுள்ள உடல்களில் குண்டு காயங்கள் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் துாக்கிலிட்டப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தெருக்களிலும் கேட்பாரற்று உடல்கள் கிடந்ததாகவும்,தற்காலிகமாக உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாகவும்,
மேலும் தினம் தோறும் மீட்கப்படும் உடல்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதாக அந்நாட்டு கீவ் பிராந்திய பகுதி காவல்துறை தலைவர் ஆண்ட்ரி நெபிடோவ் தெரிவித்துள்ளார்.