50 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிய கே.வி.எஸ் சீனிவாசன்

Students Govt School KVS Sreenivasan Note Pad
By Thahir Nov 16, 2021 12:18 AM GMT
Report

கே.வி.எஸ்.சீனிவாசன் தனது சொந்த செலவில் 50 மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கே.வி.எஸ் சீனிவாசன் இவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.

ஏழை மக்களுக்கு உதவுவது அனைவருக்கும் ஆதரவு கரம் நீட்டி வருகிறார் இவர்,பல்வேறு மக்களின் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளார்.

சமுதாய பணிகளில் தன்னை முழு அர்பணிப்பு உணர்வோடு ஈடுபடுத்தி வரும் இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ரூ.5 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கையடக்க மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசந்திர பானுரெட்டியிடம் வழங்கினார்.