அப்பா வயதுடைய அரசியல் பிரபலத்தை திருமணம் செய்த குட்டி ராதிகா - யார்னு தெரியுமா?
குட்டி ராதிகா திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குட்டி ராதிகா
கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த இயற்கை என்ற திரைப்படத்தை பார்த்த யாரும் இவரை மறந்திருக்க முடியாது. அபாரமான க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடித்திருப்பார்.
குட்டி ராதிகா கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார். தமிழில் வர்ணஜாலம், உள்ளக்காதல், மீசை மாதவன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இயற்கை படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு இவர் திரை உலகை விட்டு காணாமல் போனார். கடந்த 2000ஆம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் கடந்த ஆண்டு ரத்தன் குமார் இறந்தார்.
இதுகுறித்து சர்ச்சை வெடித்த நிலையில் குட்டி ராதிகாவிடம் போலீசார் பல விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின் வெளியுலகில் தலைகாட்டாமல் இருந்தார் குட்டி ராதிகா.
திருமணம்
இந்நிலையில் திடீரென ஒருநாள் தனக்கும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமனாகி விட்டது என்று தெரிவித்தார். எங்களுக்கு ஷாமிகா என்ற பெண் குழந்தையும் உள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியடைய செய்தார்.
திருமணத்தைப் பற்றி வெளியில் தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் இத்தனை ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்ததாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.