ட்ரெண்டிங்கில் கலக்கும் குட்டி பட்டாஸ் பாடல்!
நடிகர் அஸ்வின் குமார் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார், பிகில் படத்தில் நடித்த ரேபா ஆகியோர் நடித்துள்ள ஆல்பம் பாடல் "குட்டி பட்டாஸ்". சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 65 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஓகே கண்மணி மற்றும் ஆதித்ய வர்மா உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ள அஸ்வின் குமாரின் ரசிகர் பட்டாளம் இந்த பாடலின் மூலம் ஒருபடி அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
இந்த பாடலின் வெற்றியால் அடுத்தடுத்து பல படங்களில், ஆல்பம் பாடல்களிலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.