ரஜினியின் அரசியல் பின்னணியில் பாஜகவா? குஷ்பு பேட்டி
அரசியலுக்கு வரவேண்டாம் என முடிவெடுத்தவர் ரஜினி, இதற்கு நடுவில் பாஜக எப்படி வந்தது என கேள்விஎழுப்பியுள்ளார் குஷ்பு. இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். தலைவர்கள் கூடிபேசியே, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜினி அரசியலுக்கு வராததற்கு அவரது உடல்நிலையே காரணம் என அவரே சொல்லிவிட்டார். பாஜக சொல்லித்தான் அரசியலுக்கு வந்தேன், பாஜகவுக்குப் பயந்து தான் அரசியலுக்கு வரவில்லை என்ற ஆளா அவர். எது சரி, தவறு என்பதை அவரே முடிவு செய்வார். அரசியலுக்கு வருகிறேன் என்று அவரே சொன்னார்.
உடம்பு சரியில்லை, அரசியலுக்கு வரவில்லை என்று அவரே சொல்லிவிட்டார். இதற்கு நடுவில் பாஜக எங்கிருந்து வந்தது. பாஜகவைப் பொறுத்தவரை அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் தாராளமாக வரலாம்.
பாஜகவுடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென்றாலும் தாராளமாகச் செய்யலாம். நாங்கள் யாரையும் தேடிச் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.