என்னோட பொண்ணுக்கும் அப்படி நடந்துச்சு....ஏஆர் ரகுமான் நிகழ்ச்சி..குஷ்பு கருத்து..!
நடைபெற்று முடிந்து கடுமையான விமர்சனங்களை பெற்று வரும் இசைப்புயலின் ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி குறித்து நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
மறக்குமா நெஞ்சம்
ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி பல்வேறு குளறுபடிகள் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகின்றது. இதற்கு பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து காவல்துறையினரும் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக பலரும் தங்களுக்கு பாலியல் சீண்டல் ஏற்பட்டதாக கருத்துக்களை கூறியது பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்கள் சந்தித்த இந்த இன்னல்களுக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக இசைப்புயல் ஏஆர் ரகுமான் தெரிவித்திருந்தார்.
குஷ்பு கருத்து
இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து நடிகை குஷ்பு ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், சென்னை இசை நிகழ்ச்சியில் ARR ரசிகர்கள் எதிர்கொண்ட பெரும் குழப்பம் மற்றும் சிரமங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்.
ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்பவர். ஆனால் இப்படி ஆகிவிட்டது. என்னுடைய மகள் டைமண்ட் பாஸ் வைத்திருந்தும் அவருக்கும், அவரின் தோழிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைய 3 மணிநேரத்திற்கு மேல் ஆனது.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மக்கள் எதிர்கொண்ட எந்தவொரு பிரச்சினைக்கும் ஏ.ஆர்.ரகுமானால் பொறுப்பேற்க முடியாது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சரியாமல் செய்திராத நிர்வாகத்தின் முழுமையான தோல்வி இது. ரஹ்மான் தனது இசை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் எப்போதும் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்குத் தகுதியான அனைத்தையும் தொடர்ந்து வழங்குவோம். அவருடன் நிற்போம், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.