சர்ச்சைக்கு பெயர் போனவர் திருமாவளவன் - காட்டமாக பேசிய குஷ்பு
ஊடக வெளிச்சத்திற்காக சர்ச்சையாக பேசுவதை கொள்கையாக வைத்திருப்பவர் திருமாவளவன் என மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் குஷ்பு. மதுரையில் பாஜக செய்தி தொடர்பாளரான குஷ்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக தலைமை நிர்வாகம் அனுமதி அளித்தால் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக தான் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அதன் பிறகு தொடர்ந்து பேசிய குஷ்பு கூறியதாவது ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள், விநாயகர் இந்தி கடவுளா என்று திருமாவளவன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தன் மீது ஊடக வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக, திருமாவளவன், சர்ச்சையாக பேசுவதையே கொள்கையாக வைத்திருப்பதாகவும், அதை கைவிட்டு பொதுமக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதை அவர் கொள்கையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.