ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார்: குஷ்பு பேட்டி
kushbu-admk-dmk-political-tamilnadu
By Jon
வருகிற சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் தானும் போட்டியிடத் தயார் என அறிவித்துள்ளார் பாஜக மாநில செய்தி தொடர்பாளரான குஷ்பு. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை, மு.க ஸ்டாலின் போட்டியிடும் அதே தொகுதியில் தானும் போட்டியிட தயார்.
கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது என தெரிவித்தார்.
மேலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.