‘‘எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி.. கூட்டத்தை பார்த்தீர்களா.!’’ : திமுக கோட்டையில் சவால் விட்ட குஷ்பு

dmk bjp kushboo fort
By Jon Mar 18, 2021 12:01 PM GMT
Report

சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று கூறுவது எதிர்க்கட்சிகளின் சதி என்று நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வேனில் ஊர்வலமாக வந்த குஷ்பு நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என கூறிய குஷ்பு.

எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி. வேட்புமனு தாக்கல் செய்யும்போது வந்த கூட்டத்தை பார்த்தீர்களா? இங்கு எனக்கு தோல்வி என்ற பேச்சுக்கு இடமில்லை. சிறுபான்மை மக்கள் பாஜகவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று கூறுவது எதிர்க்கட்சிகளின் சதி என கூறினார் திமுகவின் பலமான பின்புலம் கொண்ட இந்த தொகுதியில் குஷ்பு வெற்றிபெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.